search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீர் திறப்பு குறைப்பு"

    • மழை குறைந்துள்ள நிலையில் அணைக்கு நீர்வரத்தும் 1476 கனஅடியாக சரிந்துள்ளது.
    • பெரியாறு 21.2, தேக்கடி 7 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    கூடலூர்:

    பருவமழை கைகொடுத்த நிலையில் வைகை அணை நீர்மட்டம் 70.01 அடியை எட்டியது. இதனைதொடர்ந்து அணையை பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர். நீர்வரத்தை பொறுத்து உபரிநீர் வைகையாற்றில் திறக்கப்பட்டு வருகிறது. மழை குறைந்துள்ள நிலையில் அணைக்கு நீர்வரத்தும் 1476 கனஅடியாக சரிந்துள்ளது. இருந்தபோதும் நீர்மட்டம் 70.01 அடியிலேயே நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1269 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 137.95 அடியாக உள்ளது. 1543 கனஅடிநீர் வருகிறது. நேற்று 511 கனஅடிநீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை நீர்திறப்பு 667 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு 179 கனஅடிநீர் வருகிறது. 40 கனஅடிநீர் பாசனத்திற்கும், 139 கனஅடிநீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.48 அடியாக உள்ளது. 110 கனஅடிநீர் வருகிறது. 30 கனஅடிநீர் பாசனத்திற்கும், 80 கனஅடி நீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 21.2, தேக்கடி 7 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • தற்போது மழை குறைந்துள்ளதால் அணைக்கும் நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது.
    • வைகைஅணையிலிருந்து தண்ணீர் திறப்பு இன்று காலை குறைக்கப்பட்டு 1169 கனஅடி நீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 அடியாகும். இந்த ஆண்டு மழை கைகொடுத்த நிலையில் அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியது. அதனைதொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டபோதும் முழுகொள்ளளவிலேயே நிலை நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி நேற்று 7574 கனஅடிநீர் திறந்துவிடப்பட்டு தேனி, மதுரை, திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட வைகை கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது மழை குறைந்துள்ளது. இதனால் அணைக்கும் நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது. மேலும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீரின் தேவை குறைவாகவே உள்ளது. எனவே வைகைஅணையிலிருந்து தண்ணீர் திறப்பு இன்று காலை குறைக்கப்பட்டு 1169 கனஅடி நீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 70.28 அடியாக உள்ளது. அணைக்கு 3888 கனஅடிநீர் வருகிறது.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 132.20 அடியாக உள்ளது. 2416 கனஅடிநீர் வருகிறது. 511 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, அணைக்கு 500 கனஅடிநீர் வருகிற நிலையில் 40 கனஅடிநீர் பாசனத்திற்கும், மீதிஉபரியாகவும் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவான 126.60 அடியில் நீடிக்கிறது. 243 கனஅடிநீர் வருகிறது. இதில் 30 கனஅடிநீர் பாசனத்திற்கும், மீதி உபரியாகவும் திறக்கப்படுகிறது. பெரியாறு 1.2, தேக்கடி 8.6, மஞ்சளாறு 25, சோத்துப்பாறை 11 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அணைகளும் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • நேற்று 1866 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை 1200 கன அடி நீர்மட்டுமே திறக்கப்படுகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அணைகளும் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

    வைகையாறு, முல்லைப்பெரியாறு, கொட்டக்குடியாறு, வராகநதி உள்பட அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. கேரளாவிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1712 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 136.55 அடியாக உள்ளது.

    பரவலாக மழை பெய்து வருவதால் முல்லை ப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்ப ட்டுள்ளது. நேற்று 1866 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை 1200 கன அடி நீர்மட்டுமே திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 70.01 அடியாக உள்ளது. 2992 கன அடி நீர் வருகிறது. 2685 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. அணைக்கு வரும் 376கன அடி நீர் உபரியாக திக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.73 அடியாக உள்ளது. 49 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 8.2, தேக்கடி 8.6, கூடலூர் 3.2, உத்தமபாளையம் 4.3, வீரபாண்டி 3.4, ஆண்டிபட்டி 8, அரண்மனைபுதூர் 2.2, போடி 1.4, பெரியகுளம் 21, மஞ்சளாறு 31, சோத்துப்பாறை 14 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டது
    • 969 கனஅடி நீர்வெளி யேற்றப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 794 கனஅடி மட்டுமே திறக்கப்படுகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் உள்ள வைகை அணை நீர்மட்டம் தென்மேற்குபருவமழை காரணமாக கடந்த வாரம் முழுகொள்ளளவை எட்டியது. இதனை தொடர்ந்து திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டது. அதன்பிறகு மழை சற்று ஓய்ந்து தற்போது மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இதனால் தற்போது அணையின் நீர்மட்டம் 69.85 அடியாக உள்ளது. வரத்து 1678 கனஅடி, நேற்று வரை 969 கனஅடி நீர்வெளி யேற்றப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 794 கனஅடி மட்டுமே திறக்க ப்படுகிறது. நீர் இருப்பு 5787 மி.கனஅடியாக உள்ளது.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 136.30 அடியாக உள்ளது. வரத்து 1126 கனஅடி, திறப்பு 1866 கனஅடி, இருப்பு 6194 மி.கனஅடி.

    மஞ்சளாறுஅணையின் நீர்மட்டம் 55 அடி, சோத்துப்பாறை நீர்மட்டம் 125.62 அடியாகஉள்ளது.

    ×